பொய்கை ஆழ்வார் (ஐப்பசி திருவோணம்) காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதம் காஸார யோகிநம் கலயே ய: ஸ்ரிய:பதி ரவிம் தீபம் அகல்பயத் // காஞ்சித் திருவெஃகாத் திருக்குளத்தில் தங்கத் தாமரைப் பூவில் அவதரித்த, தம் திவ்ய ஞான ஒளியால் ஸூர்ய தேஜஸ்ஸில் ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட பொய்கை ஆழ்வாரைத் துதிக்கிறேன். / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பூதத்தாழ்வார் (ஐப்பசி அவிட்டம்) மல்லாபுர வராதீசம் மாதவீ குஸுமோத்பவம் / பூதம் நமாமி யோ விஷ்ணோர் ஜ்ஞானதீபம் அகல்பயத // திருக்கடல்மல்லைத் தலைவர், மாதவிப் பூவில் அவதரித்தவர், தம் ஞான திருஷ்டியால் நாராயணனைக் கண்டுகளிக்க ஞான தீபம் ஏற்றியவரான பூதத்தாழ்வாரை வணங்குகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* பேயாழ்வார் (ஐப்பசி சதயம்) த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம் / கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே // திருமயிலைத் தலைவர். கிணற்றில் செவ்வல்லிப் பூவில் அவதரித்த ஸ்ரீமந் நாராயணனைக் கண்ட திவ்ய சக்ஷுஸ் பெற்ற பேயாழ்வார் திருவடிகளை வணங்குகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* திருமழிசை ஆழ்வார் (தை மகம்) சக்தி பஞ்சமய விக்ரஹாத்மநே சூக்திகாரஜத சித்த ஹாரிணே முக்திதாயக முராரி பாதயோர் பக்திஸார முநயே நமோ நம: // எம்பெருமான் முராரியின் கமலப் பாதங்களில் வைத்த பக்தியே வடிவெடுத்தவரும், பஞ்சோபநிஷத்மய திருமேனியை உடைய (நம் சரீரம் நிலம் நீர் காற்று வெளி தீ எனும் பஞ்ச பூதங்களால் ஆனது. எம்பெருமான் திருமேனியோ விஸ்வம், நிவ்ருத்தம், சர்வம், பரமேஷ்டி, புமான் எனும் பஞ்ச உபநிஷத்துகளால் ஆனது) எம்பெருமானைத் தன் நெஞ்சிலே தரித்தவரும், நமக்கு மதி தர வல்லவருமான திருமழிசைப் பிரானுக்கு என் வணக்கங்கள். ஸூக்திஹாரன் என்னும் அரசனிடத்தில் ஜயித்த ஹாரத்தை அணிந்து கொண்டிருப்பவர் என்றும் சொல்லப்படும்.* / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
மதுரகவி ஆழ்வார் (சித்திரை சித்திரை) அவிதித விஷயாந்தரஸ் சடாரேர் உபநிஷதாம் உபகான மாத்ர போக: / அபி ச குண வசாத் ததேக சேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து // நம்மாழ்வாரைப் பாடுவது தவிர வேறொன்றும் செயலாக நினையாதவர், நம்மாழ்வார் பாசுரம் தவிர வேறொன்றையும் பாடவும் விழையாதவர், அவருக்கே அடிமைப் பட்டவரான மதுரகவி ஆழ்வார் அடியேன் மனத்தில் உறுதியாக எழுந்தருளட்டும். . /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* நம்மாழ்வார் (வைகாசி விசாகம்) மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி: ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் | ஆத்யஸ்யந:குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா // ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம் எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
குலசேகர ஆழ்வார் (மாசி புனர்வஸு) குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே தமஹம் சிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் // எப்போதும் ஸ்ரீ ரங்க யாத்ரை பற்றிய பேச்சே நிகழும் நகரைத் தலைநகராகக் கொண்ட அரசர் குலசேகரப் பெருமாள் திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகி கிறேன். / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* பெரியாழ்வார் (ஆனி ஸ்வாதி) குருமுகம் அநதீத்ய ப்ராஹவே தாந் அஸேஷாந் நரபதி பரிக்லுப்தம் ஸுல்கமாதாது காம: ச்வசுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத் த்விஜ குல திலகம் விஷ்ணுசித்தம் நமாமி // ஒரு குருவிடமும் பயிலாது எம்பெருமான் க்ருபையினாலேயே அனைத்து வேதங்களையும் அறிந்து வேத சாரங்களை சொல்லிப் பரத்வ ஸ்தாபநம் பண்ணிய அந்தணர் தலைவர், ஆண்டாளின் தமப்பனார். திருவரங்க நாதனுக்கே மாமனார் ஆகிய பெரியாழ்வாரை அடி பணிகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* ஆண்டாள் (ஆடி பூரம்) நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்நம் பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ / ஸ்வோசிஷ்டாயாம் ச்ரஜிநிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: // நீளா தேவியின் திருமார்பில் தலைவைத்துறங்கும் கண்ணன் எம்பெருமானை, பாரதந்தர்யம் உணர்த்தும் வகையில் துயிலுணர்த்துபவள், எம்பெருமானுக்கே தான் சூடிக்களைந்த மாலையை அவன் விரும்பியபடி சமர்ப்பித்தவள் திருவடிகளை மீண்டும் மீண்டும் தொழுகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
தொண்டரடிப்பொடி ஆழ்வார் (மார்கழி கேட்டை) தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜவதர்ஹணியம் / ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே // ஸ்ரீ ரங்கநாதனைப் பரவாசு தேவனாகவே பாவித்து அவனை ஓர் அரசனைபோல் மிகவும் நளினமாகத் துயிலெழுப்பிய தொண்டரரடிப் பொடி ஆழ்வாரைப் போற்றுகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருப்பாணாழ்வார் (கார்த்திகை ரோஹிணி) ஆபாத சூடம் அனுபூய ஹரிம் சயாநம் மத்யே கவேர ஹிதுர் முதிதாந்தராத்மா / அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் யோ நிச்சிகாய மனவை முநிவாஹநம் தம் // இரண்டு ஆறுகளின் நடுவே அறிதுயில் கொண்ட அரங்கநாதனைத் திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தப் பாடிய, லோகஸாரங்க முனிவரால் தோள் மேல் சுமந்து அவனைக் கண்டு களித்து அவனைக் கண்டு களித்த கண்களால் இனி வேறொன்றும் காணேன் என்று அவன் திருவடி சேர்ந்த திருப்பாணாழ்வாரை த்யானிக்கிறோம். . /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* திருமங்கை ஆழ்வார் (கார்த்திகை கார்த்திகை) கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம் யஸ்ய கோபி: ப்ரகாசாபிர் ஆவித்யம் நிஹதம் தம: கலிகன்றி என்று திருநாமம் கொண்டவர், கவிகளில் ஸூர்யன் போல் ப்ரகாசிப்பவர், அடியேன் அஞ்ஞாந இருளைத் தம் ஒளிமிக்க சொற்களால் முற்றிலும் அகற்றிய ஞானக் கதிரவனான திருமங்கை ஆழ்வாரை த்யானிக்கிறேன். . /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஆழ்வார்கள் வாழி திருநாமம்பொய்கையாழ்வார் (ஐப்பசி திருவோணம்) செய்யதுலாவோணத்திற் செகத்துதித்தான் வாழியே திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே/ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பொய்கையாழ்வார் (ஐப்பசி திருவோணம்) செய்யதுலாவோணத்திற் செகத்துதித்தான் வாழியே திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே/ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பேயாழ்வார் (ஐப்பசி - ஸதயம்) திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே மலர்கரிய நெய்கல்கனில் திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே நெருங்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருமழிசை ஆழ்வார் (தை மகம்) அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
மதுரகவி ஆழ்வார் (சித்திரை - - சித்திரை) சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே/ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
நம்மாழ்வார் (வைகாசி – விசாகம்) திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே திருவான திருமுகத்துச் செவியென்னும் வாழியே இருக்குமொழி என்னென்ஞ்சில் தேக்கினான் வாழியே எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே ஆனதிருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே ஆசிரியமேழுபாட்டளித்த பிரான் வாழியே ஈனமறவந்தாதியெண்பத்தேழீந்தான் வாழியே இலகுதிருவாய்மொழி ஆயிரமுரைத்தான் வாழியே பிரான் வாழியே வானணியு மாமாடக் குருகை மன்னன் வாழியே வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே சேனையர்கோன் அவதாரஞ் செய்தவள்ளல் வாழியே திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
*குலசேகராழ்வார் (மாசி - புனர்பூசம்) அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பெரியாழ்வார் (ஆனி - ஸ்வாதி) நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஆண்டாள் (திருவாடிப் பூரம்) திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
தொண்டரடிப்பொடி ஆழ்வார் (மார்கழி - கேட்டை) மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருப்பாணாழ்வார் (கார்த்திகை -ரோஹிணி) உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்தவள்ளல் வாழியே வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்தபிரான் வாழியே மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே திருப்பாணன் பொற்பதங்கள் /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருமங்கை ஆழ்வார் (கார்த்திகை - கார்த்திகை) கலந்த திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே! காசினியிற் குறையலூர்க் காவலோன் வாழியே! நலந்திகழ் ஆயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே! நாலைந்தும் ஆறுஐந்தும் நமக்குரைத்தான் வாழியே! இலங்கெழு கூற்றிருக்கை இருமடல் ஈந்தான் வாழியே! இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழு ஈந்தான் வாழியே! வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே! வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே! /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
மணக்கால் நம்பி (மாசி - மகம்) தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே மாசிமகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே மால்மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஆளவந்தார் (ஆடி - உத்ராடம்) மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பெரிய நம்பி (மார்கழி - கேட்டை) அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
எம்பெருமானார் (சித்திரை - திருவாதிரை) அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
எம்பார் (தை - புனர்பூசம்) பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பட்டர் (வைகாசி -அனுஷம்) தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
நஞ்சீயர் (பங்குனி - உத்ரம்) தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே சீமாதவனென்னும் செல்வனார் வாழியே பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே பங்குனியில் உத்தரநாள் பாருதித்தான் வாழியே ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே ஒன்பதினாயிரப்பொருளை யோதுமவன் வாழியே எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே எழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ம்பிள்ளை (கார்த்திகை - கார்த்திகை) தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாமியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
வடக்கு திருவீதிப் பிள்ளை (ஆனி - ஸ்வாதி) ஆனிதனிற் சோதிநன்னா ளவதரித்தான் வாழியே ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி - திருவோணம்) அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி - விசாகம்) வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசி - திருமூலம்) இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
மாமுனிகள் ஆர்த்தி ப்ரபந்தத்தில் அருளியன: சீராருமெதிராசர் திருவடிகள் வாழி திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருநாள்பாட்டு - திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது) சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள்மதம் சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள் வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள் மேதினி நம் சுமை ஆறுமெனத்துயர்விட்டு விளங்கிய நாள் மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள் மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள் செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச் சீமானிளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே // செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள் சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள் மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள் மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள் கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள் காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள் அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள் அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருக்கச்சி நம்பி (மாசி - ம்ருகசீர்ஷம்) மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
கூரத்தாழ்வான் (தை - ஹஸ்தம்) சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
முதலியாண்டான் (சித்திரை - புனர்பூசம்) அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருவரங்கத்து அமுதனார் (பங்குனி - ஹஸ்தம்) எந்தாதை கூரேசர் இணையடியோன் வாழியே எழில் மூங்கில்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே நந்தாமல் எதிராசர் நலம்புகழ்வோன் வாழியே நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே பைந்தாம அரங்கர் பதம் பற்றினான் வாழியே பங்குனியில் அத்தநாள் பாருதித்தோன் வாழியே அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே அணி அரங்கத்தமுதனார் அடி இணைகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி - புனர்பூசம்) திருவிருந்த மலர்த்தாள்கள் வாழியே சிறந்த செந்துவராடையும் வாழியே தருவிருந்தகை முக்கோலும் வாழியே யோகியை வாழ்த்தி வாழ்ந்தருள் வாய்மலர் வாழியே கருணை மேவும் இராமனுச முனி கனக மௌலி கலந்தூழி வாழியே தடம்புயத்தினில் சங்காழி வாழியே மருவு கொண்டல் மணவாள யோகியை வாழ்த்தி வாழ்ந்தருள் வாய்மலர் வாழியே கருணை மேவும் இராமானுச முனி கனக மெளலி கலந்தூழி வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
வாழி திருநாமம் என்பது பெருமாள், தாயார்கள், ஆழ்வார்கள் பற்றிய கொண்டாட்டப் பாசுரம். இவை சாற்றுமுறையின் முடிவில் சேவிக்கப்படும். அறிவோம் /அனுஷ்டிப்போம் / தகுதிபெறுவோம்
உங்களின் தேவையே எங்களின் சேவை/WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI/CELL NO/9841018879/9841065559/
raghavan.png

// RAM RAM VADHYAR WEBSITE LINK //

WWW.THISAIKATTI.COM (CLICK HERE) ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //

நல்லது செய்வோம் நல்லது மட்டுமே நடக்கும்

ராம் 🙏ராம்