* பெரிய பெருமாள் (ஆவணி ரோஹிணி) ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே | சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஸ்ரீமத் பகவத்கீதை ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும், ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன். / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்) நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: / ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் || எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ, செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* சேனை முதலியார் (ஐப்பசி பூராடம்) ஸ்ரீரங்கசந்த்ரமஸம் இந்திரயா விஹர்தும் விந்யஸ்ய விச்வசித சிந்நயநாதிகாரம் | யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி சரியாம || ஸ்ரீ ரங்க சந்த்ரர்களாகிய பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் லீலைகளைச் செய்து போர, எம்பெருமான் அனுமதித்த தம் திருவிரல் அசைவினாலேயே உயிர் உள்ளன மற்றும் உயிர் அல்லன அனைத்தையும் நடத்தும் விஷ்வக்சேனர் திருவடிகளையே ஒரே புகலாகப் பற்றுகிறோம்.. வாழி திருநாமம் /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* நம்மாழ்வார் (வைகாசி விசாகம்) மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி: ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் | ஆத்யஸ்யந:குலபதேர் வகுளாபிராமம் ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா // ஸ்ரீவைஷ்ணவ சந்தானத்தின் தலைவரும், ப்ரபந்நஜன கூடஸ்தரும் மகிழ மாலை அணிந்தவரும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ நிறைந்த திருவடிகளை உடையவரும், தாய் தந்தை மனைவி மக்கள் ஏய்ந்த பெருஞ்செல்வம் எல்லாமும் ஆனவருமான நம்மாழ்வாரை வணங்குகிறேன். / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஸ்ரீமந் நாதமுனிகள் (ஆனி அனுஷம் // நம:அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராசயே நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே || எப்போதும் பகவத் த்யானத்தில் ஆழ்ந்து பக்திக்கு கடலானவரும் , அளப்பரிய ஞானம் நினைப்பரிய வைராக்யம் ஆகியன பெற்றவருமான ஸ்ரீமந் நாதமுனிகளை வணங்குகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* உய்யக் கொண்டார் (சித்திரை கார்த்திகை) நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே / ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே || ஸ்ரீமந் நாதமுனிகள் திருவடிகளில் தம் ஸர்வ பாரமும் விட்டுச் சரணடைந்த நம் குல நாதரான புண்டரீகாக்ஷரை வணங்குகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
மணக்கால் நம்பி (மாசி மகம்)அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம் அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண / ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவராஜ்யம் நமாமிதம் ராமமேய ஸத்வம்பட்டத்து இளவரசாகிய யாமுனாசார்யரைத் தூதுவளை தந்து மிக எளிதாகத் திருத்திப் பணிகொண்ட ஸ்ரீராம மிச்ரர் எனும் அளவிலா ஸாத்விகோத்தமரை வணங்குகிறேன் /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* ஆளவந்தார் (ஆடி உத்தராடம்) யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ: / வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம் || அசத்தாய்க் கிடந்த எனக்கு ஆத்மாவைக் காட்டி, சத்தை தந்து எல்லா அஞ்ஞானங்களையும் த்வம்சம் செய்து என்னை ஒரு பொருளாக உளவாக்கியயாமுனாசார்யரின் திருவடிகளை த்யாநிக்கிறேன் /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா | பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம: // எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந் நாராயணனின் கல்யாணகுணக் கடலில் ஆழ்ந்துள்ள நிறைவுள்ள மஹா பூர்ணரை வணங்குகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* எம்பெருமானார் (சித்திரை திருவாதிரை) யோநித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே | அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ: ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே || அச்யுதனின் திருவடியில் பக்தியால் மற்றெல்லாவற்றையும் புல்லாக மதித்துத் தள்ளியவரும், அடியேன் குருவும், கருணைக் கடலேபோல் வடிவெடுத்தவரும் ஆகிய பகவத் ராமானுசரை அடி பணிகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* எம்பார் (தை புனர்வஸு) ராமானுஜ பதச் சாயா கோவிந்தாஹ்வ அநபாயிநீ | ததா யத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விச்ரமஸ்தலீ || ராமானுஜரின் திருவடித் தாமரை நிழல்போல் பிரியாதவரும், அடியேன் துயர்களை நீக்கி இளைப்பாற்றும் நிழலுமான கோவிந்தப் பெருமாளின் புகழ் ஓங்குக. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* பட்டர் (வைகாசி அனுஷம்) ஸ்ரீ பராஸர பட்டார்ய ஸ்ரீரங்கேச புரோஹித: / ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ச்ரேயஸே மேஸ்து பூயஸே // கைங்கர்யஸ்ரீ நிறைந்த புகழாளர், ஸ்ரீ ரங்கேசனின் புரோகிதர், ஸ்ரீவத்சாங்கர் கூரத்தாழ்வானின் திருக்குமாரர் ஸ்ரீ பராசர பட்டர் திருவருளால் அடியேனுக்கு சகல மங்களமும் ஆகுக. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
நஞ்சீயர் (பங்குமி உத்தரம்)நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே/ யஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம் // மூவுலகுக்கும் மங்களம் சேர வேதாந்த சாரமான தம் அமுத வாக்குகளைப் பொழியும் வேதாந்தி நஞ்சீயரை வணங்குகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
நம்பிள்ளை (கார்த்திகை கார்த்திகை) வேதாந்த வேத்ய அம்ருத வாரிராசேர் வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம் | ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம் || நீர் நிறைந்த மேகம் போல் வேதாந்த ஞானம் செறிந்த நஞ்சீயர் திருவாக்குகளைத் தம் கருணையால் வேத வேதாந்தப் பொருள்களைச் சுவைப்படக் கூறும் பெருங்கருணையாளரான கலிவைரி தாசர் திருவடிகளைப் பற்றுகிறேன் /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* வடக்குத் திருவீதி பிள்ளை (ஆனி ஸ்வாதி) ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி சிரஸா ஸதா | யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம || நம்பிள்ளையின் திருவடித் தாமரைகளில் அடியவரான ஸ்ரீக்ருஷ்ணர் வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவருளால் சகல ஸாரார்த்தமும் அறியப் பெறுகிறேன். இப்படிப்பட்ட வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருவடிகளை எப்பொழுதும் வணங்குகிறேன் /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி திருவோணம்) லோகாசார்ய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே / ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம: // க்ருஷ்ணபாதர் ஆகிய வடக்குத் திருவீதிப் பிள்ளை திருக்குமாரர், ஸம்ஸாரமாகிய பாம்புக் கடியிலிருந்து ஜீவர்களுக்கு விடுதலை தரும் மருந்தான பிள்ளை உலகாசிரியரை வணங்குகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி விசாகம்) நம ஸ்ரீசைலநாதாய குந்தீ நகர ஜந்மநே | ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஸாலிநே || குந்தீ நகரில் அவதரித்தவர், ஆசார்ய கடாக்ஷத்தால் பரம ஸ்லாக்யமான கைங்கர்யஸ்ரீயை அடைந்தவரான திருமலை ஆழ்வார் என்கிற திருவாய்மொழிப் பிள்ளை திருவடியை வணங்குகிறேன்./ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
* அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்) ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் | யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் || திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும், ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல்போல் நிரம்பியவரும் யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
*திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே செய்யவிடைத்தாய்மகளார் சேவிப்போன் வாழியே இருவிசும்பில்வீற்றிருக்கு மிமையவர்கோன் வாழியே இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பெரிய பிராட்டியார் (பங்குனி உத்ரம்) பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஸேனை முதலியார் (ஐப்பசி - பூராடம்) ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
நம்மாழ்வார் (வைகாசி - விசாகம்) மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே ஆதிகுருவாய்ப் புவியிலவதரித்தோன் வாழியே அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவோன் வாழியே நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
நாதமுனிகள் (ஆனி - அனுஷம்) ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
உய்யக்கொண்டார் (சித்திரை - கார்த்திகை) வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
மணக்கால் நம்பி (மாசி - மகம்) தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே மாசிமகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே மால்மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஆளவந்தார் (ஆடி - உத்ராடம்) மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பெரிய நம்பி (மார்கழி - கேட்டை) அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
எம்பெருமானார் (சித்திரை - திருவாதிரை) அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
எம்பார் (தை - புனர்பூசம்) பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பட்டர் (வைகாசி -அனுஷம்) தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
நஞ்சீயர் (பங்குனி - உத்ரம்) தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே சீமாதவனென்னும் செல்வனார் வாழியே பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே பங்குனியில் உத்தரநாள் பாருதித்தான் வாழியே ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே ஒன்பதினாயிரப்பொருளை யோதுமவன் வாழியே எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே எழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ம்பிள்ளை (கார்த்திகை - கார்த்திகை) தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாமியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
வடக்கு திருவீதிப் பிள்ளை (ஆனி - ஸ்வாதி) ஆனிதனிற் சோதிநன்னா ளவதரித்தான் வாழியே ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பிள்ளை லோகாசார்யர் (ஐப்பசி - திருவோணம்) அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருவாய்மொழிப் பிள்ளை (வைகாசி - விசாகம்) வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசி - திருமூலம்) இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
மாமுனிகள் ஆர்த்தி ப்ரபந்தத்தில் அருளியன: சீராருமெதிராசர் திருவடிகள் வாழி திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருநாள்பாட்டு - திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது) சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள்மதம் சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள் வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள் மேதினி நம் சுமை ஆறுமெனத்துயர்விட்டு விளங்கிய நாள் மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள் மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள் செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச் சீமானிளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே // செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள் சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள் மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள் மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள் கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள் காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள் அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள் அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருக்கச்சி நம்பி (மாசி - ம்ருகசீர்ஷம்) மருவாரும் திருமல்லி வாழவந்தோன் வாழியே மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே ஆறுமொழி பூதூரர்க்களித்தபிரான் வாழியே திருவாலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
கூரத்தாழ்வான் (தை - ஹஸ்தம்) சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே ஏராரும் தையில் அத்தத்திங்கு வந்தான் வாழியே எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
முதலியாண்டான் (சித்திரை - புனர்பூசம்) அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே அருட்பச்சை வாரணத்தில் அவதரித்தான் வாழியே சித்திரையில் புனர்பூசம் சிறக்கவந்தோன் வாழியே சீபாடியம் ஈடுமுதல் சீர்பெறுவோன் வாழியே உத்தமமாம் வாதூலம் உயரவந்தோன் வாழியே ஊர்திருந்தச் சீர்பாதம் ஊன்றினான் வாழியே முத்திரையும் செங்கோலும் முடிபெறுவோன் வாழியே முதலியாண்டான் பொற்பதங்கள் ஊழிதொறும் வாழியே. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
திருவரங்கத்து அமுதனார் (பங்குனி - ஹஸ்தம்) எந்தாதை கூரேசர் இணையடியோன் வாழியே எழில் மூங்கில்குடி விளங்க இங்கு வந்தோன் வாழியே நந்தாமல் எதிராசர் நலம்புகழ்வோன் வாழியே நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே பைந்தாம அரங்கர் பதம் பற்றினான் வாழியே பங்குனியில் அத்தநாள் பாருதித்தோன் வாழியே அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே அணி அரங்கத்தமுதனார் அடி இணைகள் வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பொன்னடிக்கால் ஜீயர் (புரட்டாசி - புனர்பூசம்) திருவிருந்த மலர்த்தாள்கள் வாழியே சிறந்த செந்துவராடையும் வாழியே தருவிருந்தகை முக்கோலும் வாழியே யோகியை வாழ்த்தி வாழ்ந்தருள் வாய்மலர் வாழியே கருணை மேவும் இராமனுச முனி கனக மௌலி கலந்தூழி வாழியே தடம்புயத்தினில் சங்காழி வாழியே மருவு கொண்டல் மணவாள யோகியை வாழ்த்தி வாழ்ந்தருள் வாய்மலர் வாழியே கருணை மேவும் இராமானுச முனி கனக மெளலி கலந்தூழி வாழியே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
வாழி திருநாமம் என்பது பெருமாள், தாயார்கள், ஆழ்வார்கள் ஆசார்யர்களைப் பற்றிய கொண்டாட்டப் பாசுரம். இவை சாற்றுமுறையின் முடிவில் சேவிக்கப்படும். அறிவோம் /அனுஷ்டிப்போம் / தகுதிபெறுவோம்
உங்களின் தேவையே எங்களின் சேவை/WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI/CELL NO/9841018879/9841065559/
raghavan.png

// RAM RAM VADHYAR WEBSITE LINK //

WWW.THISAIKATTI.COM (CLICK HERE) ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //

நல்லது செய்வோம் நல்லது மட்டுமே நடக்கும்

ராம் 🙏ராம்