______________
ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத் கைங்கர்யரூபம், ப்ராத: / ஸாயம் / ஸமிதாதானம் கரிஷ்யே /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஸ்ரீபகவதாஜ்ஞயா பகவத் கைங்கர்யரூபம், ப்ராத: / மாத்யான்னிகம் / ஸாயம் /ஸந்த்யாம் காயத்ரி மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஓம் வைஸ்வா நராய வித்மஹே லாலீலாய தீமஹி தந்நோஅக்னிப்ரசோதயாத் / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
வேதவித்துக்கள். முதல் ஆசிரமமான பிரம்மச்சரியத்துக்கு ஒரு குரு; கடைசி ஆசிரமமான ஸந்நியாசத்துக்கு ஒரு குரு. வேத வேதாங்கம் அறிந்தவர்கள் முதல் ஆசிரமத்துக்கு குரு. வேதம் உள்பட எல்லாவற்றையும் விட்டு பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் கடைசி ஆசிரமத்துக்கு குரு. வித்தையைத் தெரிந்து கொள்வது முதல் ஆசிரமம். ஞானத்தைத் தெரிந்து கொள்வது கடைசி ஆசிரமம். / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
எந்த மந்திர ஸித்திக்கும் நியமம் அவசியம் வேண்டும். ஆத்மா கடைத்தேறுவதற்கு மந்திரமயமான வேதம் இருக்கிறது. அதைப் பாடம் பண்ணுவதற்கு ஒரு நியமம் வேண்டும். வேத ஸமூஹம் முழுவதற்கும் ஏற்பட்ட இந்த நியமமே பிரம்மச்சரியமாகும். / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
உபநயனம் பிரம்மச்சரியத்துக்கு ஆரம்பம். அதன் முடிவு 'ஸமாவர்த்தனம்', உபநயனம் முதல் ஸமாவர்த்தனம் வரையில் இருப்பது ப்ரஹ்மச்சரியம். திரும்பி வருகிறது என்று அர்த்தம். ஒரு இடத்துக்குப் போனால்தான் போன இடத்திலிருந்து திரும்பி வருவது என்பது முடியும். அகத்திலிருந்து குருகுலத்துக்குப் போய் வேத அத்யயனத்தைப் பூர்த்தி பண்ணிவிட்டு அகத்திற்குத் திரும்பி வருவதுதான் ஸமாவர்த்தனம். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
அங்கம் என்றால் பிரதானம் ஒன்று வேண்டும். பிரதானத்திற்கு அங்கி என்று ஒரு பெயருண்டு. உபநயனம் என்ற அங்கத்துக்கு அங்கியாக இருப்பது பிரஹ்மச்சர்யம். ப்ரஹ்மச்சர்யம் என்ற இடத்தில் ப்ரஹ்ம என்பதற்கு வேதம் என்பது அர்த்தம். வேதத்தை மனப்பாடமாகக் கற்று ஸ்வாதீனப்படுத்தவே ஒரு ஆசிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் ப்ரஹ்மச்சர்யம். அதற்கு பூர்வாங்கம் உபநயனம். அந்த ஆசிரமத்துக்கு கடைசி பக்ஷமாக ஏற்பட்ட காலம் பன்னிரண்டு வருஷங்கள். ஒரு வேதத்தை ஸாங்கோபாங்கமாக அத்தியயனம் பண்ணுவதற்குப் பன்னிரண்டு வருஷங்கள் வேண்டும். / /ராம் ராம் வாத்யார்
பிரம்ம என்பதற்கு ஆறு அர்த்தங்கள் உண்டென்று சொன்னேன். பிரம்ம என்பது விஷ்ணுவுக்கு ஒரு பெயர். பரமசிவனுக்கும் ஒரு பெயர். பிராம்மண ஜாதி, தபஸ், பரமாத்ம ஸ்வரூபம் என்பவைகளுக்கும் அந்தப் பெயருண்டு. பிரம்மா என்று நீட்டினால் சதுர்முகனுக்குப் பெயராகிறது. பிரம்மச்சரியம் என்பது வேதாத்தியயனம் பண்ணுவதற்காக ஏற்பட்ட ஒரு தீக்ஷ. அதற்குப் பூர்வாங்கமாக ஏற்பட்ட ஒரு காரியம் உபநயனம். பரிஷேசனம் என்று ஜலத்தால் சாதத்தைத் தெளிப்பது எதற்கு?அது போஜனத்திற்கு அங்கம். சாதத்தை அப்படியே சாப்பிட்டு விடக்கூடாது. ஈச்வரப் பிரஸாதமாக்கிச் சாப்பிட வேண்டும் என்றே முதலில் அதன் மேல் ஜலம் தெளிக்கிறோம். இப்படிச் செய்துவிட்டு சாப்பிடாமல் இருந்தால் எத்தனை அசட்டுத்தனம்? உபநயனம் பண்ணிவிட்டு வேதாத்தியயனம் பண்ணாமலிருப்பது பரிசேஷனம் பண்ணிவிட்டு சாப்பிடாமலிருப்பதைப் போன்றது. இப்போது அத்தனை பேரும் இப்படி அசடுகளாக இருந்து வருகிறோம். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
உப-சமீபத்தில், நயனம் - அழைத்துக் கொண்டு போகிறது. யாருக்கு ஸமீபத்தில் அழைத்துக் கொண்டு போகிறது?ஒருவனை குருவுக்கு ஸமீபத்தில் அழைத்துக் கொண்டு போகிறதுதான் உபநயனம். // உபநயனம் என்ற பூர்வாங்கத்திற்கும் ஸமாவர்த்தனம் என்கிற உத்தராங்கத்திற்கும் நடுவில் நான்கு வ்ரதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நம்முடைய தக்ஷிண தேசத்தில் பெரும்பாலும் அநுஷ்டானத்திலுள்ள க்ருஷ்ண யஜுர் வேதத்தை எடுத்துக் கொண்டால், அவை பிராஜபத்யம், ஸெனம்யம், ஆக்னேயம், வைச்வதேவம் என்பவை. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
வேத பாகம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நியமங்கள் இருக்கின்றன. அவ்வளவுக்கும் சேர்த்துமொத்த விரதம் பிரம்மச்சரியமாகும். தனித்தனி விரதங்கள் இருக்கின்றன. வேதத்தை நான்கு காண்டமாக பிரித்திருக்கிறார்கள். அவைகளை நாலு மஹரிஷிகள் பிரவர்த்திப்பித்திருக்கிறார்கள். அந்த மஹரிரிஷிகளை உத்தேசித்து பிரம்ம யக்ஞம் பண்ணப்படுகிறது. ( பிரம்மயக்ஞம் என்பதற்கு வேத யக்ஞம் என்பதுதான் அர்த்தம்) / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஒவ்வொரு காண்டத்திற்கும் தனித்தனியாக ஒரு விரதம் உண்டு. பிரம்மச்சரிய ஆசிரமத்தின்போது ஒவ்வொரு காண்டத்தை அத்தியயனம் பண்ணுகிறபோது அதற்கு ஏற்பட்ட விரதத்தையும பண்ணவேண்டும். பிரஜாபத்ய காண்டத்திற்கு ஒரு விரதம் ஏற்பட்டிருக்கிறது. அது பிரஜாபத்யம். அப்புறம் ஸெனம்ய விரதம், பின்பு ஆக்நேய விரதம், அப்புறம் வைச்வதேவ விரதம் செய்ய வேண்டும். நான்கு காண்டங்களும் முடிந்தபின்பு குருவினுடைய அனுஜ்ஞை (அனுமதி) யின் மேல் ஸமாவர்த்தனம் பண்ணிக் கொள்ள வேண்டும். (வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் ஸம்ஸ்காரத்தை பண்ணிக் கொள்ள வேண்டும்.) . / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
முன்பு சொன்ன நான்கு காண்ட விரதங்களும் கிருஷ்ண யஜுர் வேதத்துக்கு ஏற்பட்டவை. ரிக்வேதத்துக்கு மஹா நாம்னி விரதம், உபநிஷத் விரதம், கோதான விரதம் ஆகிய நான்கு விரதங்கள் உண்டு. இப்படி ஒவ்வொரு வேதத்துக்கும் தனித்தனி விரதங்கள் இருக்கின்றன. கிருஷ்ண யஜுர் வேதமே அதிகம் பிரசாரத்திருப்பதால் அதை முதலில் சொன்னேன். குருகுல வாஸத்தை முடிக்கும்போது செய்யும் ஸமாவர்த்தனத்திற்கு ஸ்நானம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதைச் செய்து கொண்டவனுக்கு ஸ்நாதகன் என்று பெயர். எல்லாரும் தம் தம் வேதத்தையும் வித்தைகளையும் அத்தியயனம் பண்ண வேண்டும். . //ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஆவணி அவிட்டம் வருகிறது. அன்று உபாகர்மா பண்ணுகிறோம். அன்று வேதத்தில் புது பாகம் ஆரம்பித்துக் கொள்ள வேண்டும். தை மாஸம் பூர்ணிமையில் உத்ஸர்ஜனம் (முடித்தல்) பண்ண வேண்டும். ஆவணி மாதத்தில் ஆரம்பித்துத் தை மாதத்தில் விட்டுவிட வேண்டும். அதாவது ஏறக்குறைய தக்ஷிணாயன ஆறு மாதத்தில் வேதாத்தியயனம் பண்ணவேண்டும். மற்ற ஆறு மாதங்களில் வேதத்தின் ஆறு அங்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். வேதாத்யயனம் செய்யும்பொழுது அந்த அந்தக் காண்டத்துக்கு ஏற்பட்ட தனி நியமத்தோடும் பிரம்மச்சரியத்துக்கு ஏற்பட்ட தனி நியமாத்தோடும் பண்ணினால் தான் மந்திர ஸித்தி உண்டாகும் /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
கல்யாணத்துக்கு முன்பு 'வ்ரதம்' என்று ஒரு பெயர் வைத்து ஒரு மணி நேரத்துக்குள் எல்லா ஸம்ஸ்காரங்களையும் சுருக்கி அர்த்தமே தெரியாமல் கிடுகிடு என்று பண்ணுகிறோம். அதுவாவது இருப்பதனால் இந்த உபந்நியாஸம் பண்ண நேரிட்டது. வேதத்தை ஸ்வீகரிப்பதற்கு ஒருத்தனை அர்ஹனாக்கி (அருகதை உள்ளவனாக்கி) அதன் மூலம் லோகம் முழுவதற்கும் நல்ல திவ்ய சக்திகளைப் பரப்புகிற பரம ச்ரேஷ்டமான கர்மாவான உபநயனத்தின் பெருமையை அறிந்து அதை உரிய காலத்தில் பண்ண வேண்டும். / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
த்வி-ஜன்-இருபிறப்பாளன்-எனப்படும் பிராம்மண, க்ஷத்ரிய, வைச்யர்கள் லோகோபகாரமான இரண்டாவது பிறப்பை அடைவது அவர்கள் எப்போது வேதத்தைக் கற்கத் தகுதி பெறுகிறார்களோ அப்போதுதான். இந்தத் தகுதியை அவர்கள் பெறுவது உபநயன ஸம்ஸ்காரத்தில்தான். இதைக் காலத்தில் செய்ய வேண்டியது பெற்றோர் கடமை. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
இப்போது இம்மாதிரி விஷயங்களில் சாஸ்திரங்கள் ரொம்பவும் அநாதரவு செய்யப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் சாஸ்திரத்தைப் பார்த்துச் செய்து வந்த நம் தேசத்தில் இப்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது. சாஸ்திர விதியும் பொது வழக்கும் இதிலே ஒரு வேடிக்கை, அல்லது பெரிய கஷ்டம், தர்ம சாஸ்திரங்களில், சூத்ரங்களில் சொல்லியுள்ள ரூல்களை மனம் போனபடி மீறுகிறபோதே, அங்கங்கே எப்படியோ பழக்கத்தில் வந்துவிட்ட சில விஷயங்களைப் பெரிய சாஸ்திர ரூல் மாதிரி நினைத்துக் கொண்டு அநுஸரித்து வருகிறார்கள். / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
உதாரணமாக அக்காள் கல்யாணத்துக்கு இருக்கும் போது தம்பிக்குப் பூணூல் போடக்கூடாது; ஒரே ஸமயத்தில் மூன்று பிரம்மச்சாரிகள் ஒரு வீட்டில் இருக்கக் கூடாது என்கிறது போன்ற காரணங்களைச் சொல்லிக் கொண்டு, பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் உபநயன ஸம்ஸ்காரம் செய்விக்காமல் இருக்கிறார்கள். ஆதாரமான தர்ம சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிற வயசு வரம்பை இம்மாதிரி லெனகிகமான வழக்கங்களை முன்னிட்டு மீறுவது ஸரியல்ல. இம்மாதிரி வழக்கங்கள் லெனகிகமான சௌகரியத்தை முன்னிட்டோ, ஸென்டிமென்ட் என்கிறார்களே, அந்த மன உணர்ச்சியை முன்னிட்டோ தான் ஏற்பட்டிருக்கக் கூடும். தர்ம சாஸ்திரத்தை மீறாமல் இவற்றையும் கடைப்பிடிப்பதில் தவறில்லை. ஆனால் ஆதாரமான ரூலை இவற்றையே பெரிய சாஸ்திரமாக நினைத்து அனுஸரிப்பது அயுக்தமானது. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஆபஸ்தம்பர் தம்முடைய தர்ம சாஸ்திரத்தின் முடிவில் நான் இதில் சொன்னதோடு எல்லா விதிகளும் முடிந்துவிட்டன என்று அர்த்தம் இல்லை. இன்னம் அநேகம் உள்ளன. அவை குலப் பழக்கத்தாலும், பிரதேசப் பழக்கத்தாலும் (தேசாதாரத்தாலும்) ஏற்பட்டிருப்பவை. இவற்றை ஸ்திரீகளிடமிருந்தும், நாலாம் வர்ணப் பொது ஜனங்களிடமிருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டு அநுஷ்டியுங்கள் என்று சொல்லியிருப்பது வாஸ்தவம்தான், ஆனால் இப்படி சொன்னவை, அவர் தர்ம சாஸ்திரத்தில் சொன்னதற்கு அதிகப்படியாக ( additional -ஆக) ஜனங்களின் பழக்கத்தில் வந்தவற்றைத்தான் குறிப்பிடுமே ஒழிய, அவர் சொன்னதற்கு முரணாக ( contrary -ஆக) உள்ள பழக்கங்களையல்ல. அதாவது சாஸ்திரத்தில் இருப்பனவற்றோடுகூட, அவற்றுக்கு முரணில்லாத குலாசார, தேசாசாரங்களையும் பின்பற்ற வேண்டுமே ஒழிய, சாஸ்திரப் பிரமாணத்தை விட்டுவிட்டு, அதற்கு மாறுதலாக ஏற்பட்டு விட்ட பழக்கங்களைக் கடைபிடிப்பது என்று வைத்துக் கொள்ளக் கூடாது. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
உபநயன ஸம்ஸ்காரத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தள்ளிப் போடவே கூடாது. கல்யாணத்திலே பண ஸம்பந்தத்தைக் கொண்டு விட்டு அதற்காக கால தாமஸம் பண்ணுவது தப்பு, சாஸ்திர விரோதமானது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதைப்பற்றி பின்னால் விவாஹ ஸம்ஸ்காரத்தில் சொல்லுகிறேன். கல்யாணத்திலாவது தவிர்க்க முடியாமல் 'ஷோ'அம்சங்கள் சேர்ந்துவிட்டன என்கலாம். நாம் வேண்டாமென்றாலும் பிள்ளையகத்தார் வேண்டும் என்றால் இந்த ஆடம்பரங்களைப் பண்ணித்தான் ஆகவேண்டும். இதற்குப் பணம் சேர்க்க வேண்டும். இதற்காகக் கால தாமஸம் பண்ண வேண்டியிருக்கிறது. அதோடு கூடக் கல்யாணம் என்பதில் வரன் என்று ஒருத்தனைத் தேடிப் பிடித்து, நமக்கு அவனைப் பிடித்து, அவன் வீட்டாருக்கும் நம் ஸம்பந்தம் பிடிக்க வேண்டியதாக இருக்கிறது. வரன் வேட்டையில் காலம் செலவிட வேண்டியதாகிறது. பூணூல் விஷயம் இப்படியில்லை. இதை ஏன் ஆடம்பரமாகப் பண்ணவில்லை என்று எந்த ஸம்பந்தியும் நம்மை நிர்பந்திக்கப் போவதில்லை. மாப்பிள்ளை தேடுகிறதுபோல் இதில் வெளியே யாரையோ தேடிப்போய் பரஸ்பர ஸம்மதத்தைப் பெறவேண்டியும் இருக்கவில்லை. ஆதலால் உரிய காலத்தில் ஒரு பிள்ளைக்குப் பூணூல் போடாமலிருப்பதற்கு எந்த ஸமானதானமும் சொல்வதற்கில்லை. அதை எந்த விதத்திலும் மன்னிப்பதற்கேயில்லை. / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
குழந்தைக்கு உடம்புக்கு நோய் வந்தால் மருந்து வாங்கித் தராமலிருந்தால் எத்தனை தப்போ, அதைவிடத் தப்பு உரிய வயசில் உபநயனம் பண்ணி அவனுக்கு ஆத்ம க்ஷேமமாகவும் அவன் மூலமாக லோகத்துக்கு க்ஷேமமாக இருக்கிற காயத்ரீ உபதேசத்தைக் கொடுக்காமலிருப்பது, வெறும் vanity, ஜம்பத்துக்காக இப்போது பூணூல் என்றால் அதை ஒரு குட்டிக் கல்யாணம் போலப் பண்ணுவது என்று வைத்துக் கொண்டு இந்தச் செலவை எவ்வளவு தள்ளிப்போடலாமோ அப்படிச் செய்வதற்காக காலம் கடத்துவதை எவ்வளவு கண்டித்தாலும் போதாது. /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
/ இதற்காக மடத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராயிருக்கிறோம். மாஸ் உபநயனம் என்று இப்போது பலருக்குச் சேர்த்துப் பூணூல் போட்டு வைக்கிறோம். இன்னம் அநேக தர்ம ஸ்தாபனத்தினர் அநேக ஊர்களில் இப்படிக் கோஷ்டிப் பூணூல் நடத்தி வருகிறார்கள். எல்லோருக்கும் காயத்ரீ பொதுவானதுதான், ஸ்மார்த்த-வைஷ்ணவ-மாத்வ மதபேதமில்லாமல் எல்லா ஜாதிப் பிள்ளைகளுக்காகவும் மாஸ் உபநயனம் செய்து வைக்கப்படுகிறது. ஒரளவு திருப்திப்படும்படி இது நடந்து வருகிறது. இன்னும் நன்றாக பலத்து விருத்தி அடையவேண்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
வசதியில்லாதவர்களுக்குத்தான் மாஸ்-உபநயனம் என்று நினைத்து, வசதியுள்ளவர்கள் அதில் சேராமல், தாங்களாகத் தனியாகவும் உபநயனம் பண்ணாமலிருந்து வருகிறார்கள். இந்த உத்தமமான ஸம்ஸ்காரத்தில் 'வசதி' என்ற வார்த்தைக்கு இடமேயில்லை. திரவிய ஸம்பந்தமில்லாத இந்தக் கர்மாவை இப்படியாக்கி வேதாப்பியாஸத்துக்கு மூலாதாரமான காரியத்தை வீணாக்கியிருக்கிறது! / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
உபநயனத்தோடு காயத்ரீ தீர்ந்தது, மறுநாளிலிருந்தே கிரிக்கெட்டும், ஸினிமாவும், கட்சி மீட்டிங்குந்தான் என்று ஆகிவிடாமல் உபநயனப்பிள்ளை தொடர்ந்து ஸந்தியாவந்தனம் செய்யும்படியாக மாதாபிதாக்கள் கண்டிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களே கிளப், ஸினிமா, மீட்டிங், ரேஸ் என்று போகிறபோது நான் சொல்வது என்ன பலன் தரும் என்று எனக்கே தெரியவில்லை. தாங்கள்தான் வீணாகப் போயாயிற்று, குழந்தைகளாவது உருப்படட்டும் என்றுதான் இதைச் செய்யவேண்டும். ஆனால், "எனக்குச் சொல்ல வருகிறாயே! நீ என்ன பண்ணுகிறாய்?" என்று பிள்ளையே மாதாபிதாக்களிடம் திருப்பிக் கொண்டு விட்டாலும் கஷ்டந்தான்!இப்படிப்பட்ட ஒரு துர்த்தசையில் நான் உங்கள் 'டய' த்தை 'வேஸ்டா'க்கி கொண்டு, "சொல்ல வேண்டியது என் கடமை" என்பதற்காகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்! / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
நீங்கள் எப்படிச் செய்வீர்களோ, அல்லது செய்யாமலே தான் போவீர்களோ. இந்த ஆக்ஞை, 'வேத அத்யயனத்துக்கு அதிகாரமுள்ள எல்லாப் பசங்களுக்கும் உரிய காலத்தில் உபநயனம் செய்விக்கப்பட வேண்டும்;அதற்கப்புறம் அவர்கள் விடாமல் ஸந்தியாவந்தனமும், தினமும் ஒரு மணியாவது வேத வித்யாப்யாஸமும் பண்ண வேண்டும் என்று தகப்பனார்களுக்குச் சொல்வதுதான்.  / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஒவ்வொரு நாளும் பிரம்மச்சாரிகள் அக்னி காரியம், அதாவது ஸமிதாதனம் (சுள்ளிகளை மந்திரபூர்வமாக ஹோமம்) பண்ண வேண்டும். பிக்ஷாசர்யம் (பிக்ஷை எடுத்தல்) செய்ய வேண்டும். அலவணமாக ( உப்பில்லாமல்) சாப்பிட வேண்டும். பிரம்மசாரிகளில் பிராம்மணன் பலாச (புரச) தண்டமும், க்ஷத்ரியன அச்வத்த (அரசு) தண்டமும், வைசியன் அத்தி தண்டமும் வைத்துக் கொள்ள வேண்டும். ச்ருத தாரணத்துக்காகத் தண்டம் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது எதை அத்தியயனம் பண்ணுகிறானோ அதைக் கெட்டியாக இருத்திக் கொள்வதற்கு அப்படிச் செய்ய வேண்டும். வேதத்திலுள்ள எல்லா மந்திரங்களும் மறவாமல் மனதில் இருக்கும்படி பாதுகாக்க தண்டம் வேண்டும். வேத மந்திர சக்தியை தாரணம் பண்ணுவதற்கு அந்த தண்டத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது. வேதநிதி அகலாமல் இருக்க அதை வைத்துக் கொள்ள வேண்டும். பிரம்மச்சாரி மேலே கிருஷ்ணாஜினம் (மான்தோல்) போட்டுக் கொள்ள வேண்டும். மேல் வேஷ்டி போட்டுக்கொள்ளக் கூடாது. பெரியவர்கள் இந்த விதிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.. ./ /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
இப்பொழுது நாம் ஒரு நாள் உபாகர்மாவைத் தான் பண்ணுகிறோம். அப்புறம் தொடர்ந்து வேதம் படிப்பதில்லை. உத்ஸர்ஜனமும் (ஒரு வேதப்பகுதியைப் படித்து முடிப்பது) பண்ணுவதில்லை. அது பண்ணாததற்குப் பிராயச்சித்தமாக 'காமோகார்ஷீத்' ஜபம் பண்ணுகிறோம்;"நான் பாபம் பண்ணவில்லை;காமம் பண்ணியது, கோபம் பண்ணியது; என்னிடம் வராதே; நமஸ்காரம் பண்ணுகிறேன்!" என்று சொல்லுகிறோம். அந்த மந்திரத்துக்கு அதுதான் அர்த்தம். உத்ஸர்ஜனம் பண்ணினால் இந்த ஜபம் அவசியம் இல்லை. / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பிரம்மச்சாரி சாப்பிடுவதற்கு கணக்கு இல்லை. வயிறு நிறைய சாப்பிடலாம். ஆனாலும் நாக்கு ருசியைக் குறைக்க வேண்டும். இவன் இஷ்டப்படியான சமையலாக இருக்கக்கூடாது, பிக்ஷையில் எது கிடைக்கிறதோ அதையே சாப்பிட வேண்டும் என்பதும் இவனை பிக்ஷை எடுக்க வைத்ததற்கு ஒரு காரணம். மூல காரணம், பிச்சை எடுப்பதால் இவனுக்கு விநயம் ஏற்படும் என்பதே.ருசி பார்க்கக் கூடாது என்றாலும் ஆஹாரத்தின் அளவுக்கு கட்டுப்பாடு இல்லை. பிரம்மச்சாரி வயிறாரச் சாப்பிட வேண்டும். பட்டினி முதலிய உபவாஸங்களை பிரம்மச்சாரிக்கு சாஸ்திரங்கள் விதிக்கவில்லை. வளர்கிற பருவத்தில் அவன் புஷ்டியாக இருக்க வேண்டும். அதே ஸமயம் ஸத்வ குணத்தோடு, முரடாக இல்லாமல் இருக்க வேண்டும். குரு சுச்ருஷை இப்படிப்பட்ட ஸத்வ குணத்தை ஊட்டவே ஏற்பட்டது. தனது வேத சாகையையும், சதுர்தச வித்யைகளில் மற்றவற்றையும் பன்னிரண்டு வருஷ குருகுல வாஸத்தில் கற்றுத் தேற வேண்டும். பிறகு ஸமாவர்த்தனம் பண்ணிக் கொண்டு அகத்துக்குத் திரும்பிப் போய் விவாஹம் செய்து கொள்ள வேண்டும். / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
கால நியமம், விரத நியமம், ஆஹார நியமம் முதலியவைகளை அநுஷ்டிப்பது பிரம்மச்சரியம். அத்யயனத்தில் ஸ்வர லோபம், வர்ண லோபம் முதலான உச்சாரணத் தப்புக்கள் ஏற்படக்கூடும். இதற்குப் பிராயச்சித்தமாக ஆவணியவிட்டத்தன்று எள்ளு மாத்திரம் சாப்பிட்டு அன்று முழுவதும் பட்டினி இருந்து மறுநாள் 1008 ஸமித்தால் காயத்ரி ஹோமம் பண்ண வேண்டும். இப்பொழுது ஹோமமாக பிரதம சிராவணக்காரர்கள் (தலைப்பூணூல் பையன்கள்) மட்டும் பண்ணுகிறார்கள் மற்றவர்கள் ஹோமமின்றி ஜபம் மாத்திரம் செய்கிறார்கள். இப்படியின்றி எல்லாருமே ஹோமம் செய்ய வேண்டும். வெறும் ஜபம் பண்ணினால் தூக்கம் வருகிறது. அதனால் லோபம் வருகிறது. ஒரு காரியம் இருந்தால் தூக்கம் வராது. அதற்காகவாவது ஸமித்தினால் ஹோமம் பண்ணலாம். பலாஸ ஸமித்தால் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் அச்வத்த ஸமித்தால் பண்ணவேண்டும். கடைசி பக்ஷம் தர்ப்பையினாலாவது பண்ண வேண்டும். / /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
/ ஸமாவர்த்தனம் பண்ணிக் கொள்ளாமல் குருவிடத்திலேயே இருந்து வாழ்க்கை முழுதையும் அவருக்கே அர்ப்பணம் பண்ணி அவர் போன பிறகும் பிரம்மச்சாரியாகவே வாழ்நாள் முழுதும் இருப்பதும் உண்டு. இதற்கு நைஷ்டிக பிரம்மச்சரியம் என்று பெயர். பீஷ்மர், ஆஞ்ஜநேயர் முதலியவர்களை நைஷ்டிக பிரம்மச்சாரிகள் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் இது கலியில் விசேஷமாக சொல்லப்படவில்லை. இயற்கை தருமத்தை அநுஸரித்து பிரம்மச்சாரியானவன் ஸமாவர்த்தனம் பண்ணிக்கொண்டு அப்புறம் விவாஹம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும் என்பதுதான் /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
/ எந்த ரூல் இருந்தாலும் எக்ஸெப்ஷன் (விலக்கு) உண்டு. நல்ல திட சித்தமும் பக்குவமும் பூர்வ ஜன்ம ஸம்ஸ்கார பலமும் இருப்பவர்கள் நைஷ்டிக பிரம்மச்சாரிகளாக இருக்கலாம். ஒரு முந்நூறு வருஷத்துக்குள் ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் அப்படித்தான் இருந்துகொண்டு முகம்மதிய பிரவாகத்தையே சிவாஜி மூலம் முறியடித்து, நம் தர்மத்தை ஆழமாக நிலைநாட்டினார். நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரின் அம்சம் அவர். ஆனால் இப்படிப்பட்ட பக்குவம் ரொம்ப அபூர்வமானவர்களுக்கே இருக்கும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
/ விவாஹமும், பஞ்ச மஹா யக்ஞங்களும், தலைக்கு ஏழேழாக உள்ள பாக-ஹவிர்-ஸோம யக்ஞங்கள் இருபத்தியன்றும் நைஷ்டிக பிரம்மசாரிகளுக்கும் நேரே பிரம்மச்சரியத்திலிருந்து துரீயாச்ரமத்துக்கு (நாலாவது ஆசிரமமான துறவறத்துக்கு) ப் போனவர்களுக்கும் இல்லாமல் போகிறது. அதாவது நாற்பது ஸம்ஸ்காரத்தில் பேர் பாதிக்கு மேல் அவர்களுக்கு இல்லாமல் போகிறது. இவை இல்லாமலே அந்தஃகரணம் சுத்தியடைகிற அளவுக்கு அவர்கள் பக்குவமாகியிருக்கவேண்டும். அதனால் இதை 'எக்ஸெப்ஷனல் கேஸ்'கள் (விதிவிலக்கானவை, அசாதாரணமானவை) என்றே சொல்லவேண்டும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
/ மஹாப் பிரளயத்தில் ஸகல ஜீவராசிகளும்தான் - அநுஷ்டானமே செய்யாதவர்களும், புழு பூச்சியும் கூடத்தான் - பரமாத்மாவோடு சேர்ந்து விடுவார்கள். அப்படியிருக்க இத்தனை அநுஷ்டானங்களைச் செய்த இவனுக்கும் அந்த நிலை கிடைத்ததில் விசேஷம் என்னவென்றால், ஒரு விசேஷம் இருக்கிறது. மறுபடியும் அகண்ட வெளியிலிருந்து பரமாத்ம ஸகுண ஆச்வரனாகி லோகங்களை ஸ்ருஷ்டித்து, ஜகத் வியாபாரங்களை ஆரம்பித்து விடுவார். அப்போது அநுஷ்டானம் பண்ணாத மற்ற ஜீவர்களும், இதர உயிரினங்களும் பூர்வ கர்மாப்படி மறுபடி பிறந்துதான் ஆகவேண்டும். அதுவரை பரமாத்மாவில் அவை இரண்டற கரையாமல் லயித்துத்தான் இருந்திருக்கும். இப்போது லயம் விலகி மறுபடி ஜன்மா உண்டாகிவிடும். ஸம்ஸ்காரங்களைச் செவ்வேனே செய்து சுத்தியானவனோ இப்படி புனரபி ஜனனம் என்று மறு ஸ்ருஷ்டியின்போது பூமியில் வந்து விழாமல், பரமாத்மாவோடு பரமாத்மாவாக இரண்டறக் கரைந்தது கரைந்தபடியே இருப்பான். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
/ உபநயனம், குருகுலவாஸம் இவற்றைப் பற்றிச் சொன்னேன். உபநயனம் செய்யவேண்டிய காலம் பிராம்மணனுக்கு கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசாகும்;அதாவது பிறந்து ஏழு வயஸு இரண்டு மாஸம் ஆனவுடன் பண்ண வேண்டும். க்ஷத்ரியர்கள் பண்ணிரண்டு வயது வரை உபநயனம் செய்யலாம். யது வம்சத்தில் பிறந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்படித்தான் செய்திருக்கிறது. வைச்யர்கள் பதினாறு வயசு வரை உபநயனம் பண்ணலாம். பிராம்மணர்களுக்கும்கூட எட்டு வயசு lower limit (கீழ் வரம்பு) , பதினாறு வயசு upper limit (உச்ச வரம்பு) என்று சாஸ்திரங்கள், போனால் போகிறதென்று அவகாசம் கொடுத்திருக்கின்றன. பதினாறு வயசுக்கு அப்புறம் பூணூல் போடாமல் ஒரு பிராம்மணப் பிள்ளையை வைத்திருப்பது மஹத்தான தோஷமாகும். /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஒருவனுக்கு இப்படி வயசுக் காலம் சொல்லியிருப்பதோடு, உபநயன ஸம்ஸ்காரம் என்பதைச் செய்வதற்கே உத்தராயணம்தான் உரிய காலம் என்றும் ஸ¨ ரியன் பூமியின் வடக்குப் பாதியில் ஸஞ்சரிக்கிற ஆறுமாஸத்திலேயே உபநயனம் செய்யவேண்டும். உபநயனம் மட்டுமின்றி விவாஹமும் இந்த ஆறுமாஸத்தில்தான் செய்யலாம். இதிலும் வஸந்த காலம் (சித்திரை, வைகாசி) தான் விவாஹத்துக்கு ரொம்பவும் எடுத்தது. அதே மாதிரி ' மாசிப் பூணூல் பாசி படரும்'என்பதாக மாசி மாதத்தில் பூணூல் போடுவதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
ஐந்து வயஸிலேயே உபநயனம் செய்யும் ஒரு வழக்கமும் உண்டு. 'அது காம்யோபநயனம்' எனப்படும். 'காம்யம்'என்றால் ஒரு இஷ்டத்தை உத்தேசித்தது என்று அர்த்தம். குழந்தை விசேஷ அபிவிருத்தி அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டால் இப்படி செய்யாததால் தோஷமில்லை. ஏனென்றால் மந்திரங்கள் நன்றாக ஸ்பஷ்டமாக உச்சரிக்க வருகிற காலத்தில், ஸம்ஸ்க்ருத ஞானம் இரண்டு வருஷமாவது ஏற்பட்டானதற்கு ஏற்பட்டானதற்குப் பிறகு உபநயனம் பண்ணுவதே போதும். (இப்போது முப்பது, முப்பத்தைந்து வயசுக்குக் கல்யாணமாகிறபோது பூணூலும் போடுவது என்று வந்திருக்கும் தசையில் நான் 'ஐந்து வயசில் பண்ண வேண்டுமென்றில்லை, எட்டில் பண்ணினாலே போதும் என்று சொல்வது எனக்கே ஹாஸ்யமாகத்தான் இருக்கிறது!ஹாஸ்யம் என்று சொன்னாலும் வைதிகப் பிரக்ஞை இருந்தால் வயிறு எரியவேண்டும்!) /ராம் ராம் வாத்யார் 9841018879 /9841065559/
பாலப் பிராயத்திலேயே காயத்ரீயை ஜபிக்க ஆரம்பித்து விட்டால் பசுமரத்தாணியாக அது பதியும். காயத்ரீயானது முக்கியமாக mental power (மனோசக்தி) , தேஜஸ், ஆரோக்யம் எல்லாவற்றையும் அபரிமிதமாகத் தரவல்லது. இந்த ஜபத்தாலேயே குழந்தைகளுக்கு நல்ல concentration (சித்த ஒருமைப்பாடு) , புத்தி தீக்ஷண்யம், சரீர புஷ்டி எல்லாமும் உண்டாகும். பிற்பாடு காமம் தெரிந்தாலும் அது ஒரேடியடியாக இழுத்துக் கொண்டு போய், புத்தி குறைவிலும் சரீர அசுத்தியிலும் விடாதபடி பெரிய கட்டுப்பாடாக இருக்கும். பிரம்மசர்ய ஆச்ரமத்தில் இவன் வீர்யத்தை விரயம் பண்ணாமல், நல்ல பிரம்ம தேஜஸோடு, அறிவாளியாகவும், குணசாலியாகவும், அடக்கம் முதலான நன்னடத்தைகளோடும், தெய்வ பக்தியோடும், ஆத்ம ஸம்பந்தமான விஷயங்களில் பிடிமானத்தோடும் இருப்பதற்கு பால்யத்திலேயே காயத்ரீ அநுஸந்தானம் பண்ணுவது பெரிய ஸஹாயம் செய்யும். தங்கள் குழந்தைகளுக்கு இத்தனை நன்மைகளையும் ஒரு காரணமுமில்லாமல் இக்காலத்துப் பெற்றோர்கள் தடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 9841018879 /9841065559/
காயத்ரீ ஜபம், வேத அத்யயனம், இதர வேதாங்கங்களைப் படிப்பது, பி¬க்ஷ எடுப்பது, குரு சுசுருஷை, நடுவே பிரம்மசரிய ஆச்ரமத்தில் செய்யவேண்டிய விரதங்கள் இவற்றை முடித்து நல்ல யௌவனத்தை அடைந்தவன் ஸமாவர்த்தனத்தோடு குருகுர வாஸத்தைப் பூர்த்தி பண்ண வேண்டும். பிறகு காசிக்கு யாத்திரை சென்று வரவேண்டும். காசி யாத்திரை முடிந்து திரும்பியவுடன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும். ஸமாவர்த்தனத்துக்குப் பிறகு விவாஹம் வரையில் அதாவது ஒருவன் காசி யாத்திரை போய் வரும் கட்டத்தின் போது - அவனுக்கு 'ஸ்நாதகன்'என்று பெயர். இக்காலத்தில் 'கான்வகேஷன்'தான் ஸமாவர்த்தனம்!கல்யாணத்தில் காசி யாத்திரை என்று ஒரு கூத்து நடக்கிறது! இதற்கப்புறம் விவாஹம் என்பது. அதுவும் நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்று. (பிரும்மசாரி தனக்காகத் தான்மட்டும் ஸமிதாதானம் செய்யமுடியும்.) பிரம்ம என்பதற்கு ஆறு அர்த்தங்கள் உண்டென்று சொன்னேன். பிரம்ம என்பது விஷ்ணுவுக்கு ஒரு பெயர். பரமசிவனுக்கும் ஒரு பெயர். பிராம்மண ஜாதி, தபஸ், பரமாத்ம ஸ்வரூபம் என்பவைகளுக்கும் அந்தப் பெயருண்டு. பிரம்மா என்று நீட்டினால் சதுர்முகனுக்குப் பெயராகிறது. பிரம்மச்சரியம் என்பது வேதாத்தியயனம் பண்ணுவதற்காக ஏற்பட்ட ஒரு தீ¬க்ஷ. அதற்குப் பூர்வாங்கமாக ஏற்பட்ட ஒரு காரியம் உபநயனம். பரிஷேசனம் என்று ஜலத்தால் சாதத்தைத் தெளிப்பது எதற்கு?அது போஜனத்திற்கு அங்கம். சாதத்தை அப்படியே சாப்பிட்டு விடக்கூடாது. ஈச்வரப் பிரஸாதமாக்கிச் சாப்பிட வேண்டும் என்றே முதலில் அதன் மேல் ஜலம் தெளிக்கிறோம். இப்படிச் செய்துவிட்டு சாப்பிடாமல் இருந்தால் எத்தனை அசட்டுத்தனம்?உபநயனம் பண்ணிவிட்டு வேதாத்தியயனம் பண்ணாமலிருப்பது பரிசேஷனம் பண்ணிவிட்டு சாப்பிடாமலிருப்பதைப் போன்றது. இப்போது அத்தனை பேரும் இப்படி அசடுகளாக இருந்து வருகிறோம். 9841018879 /9841065559/
தூய்மைக் குறைவுக்கெல்லாம் காரணமானது சிற்றின்பம் என்று மஹான்களெல்லாம் பாடி வைத்திருந்தாலும், அதிலும் கூட ஒரு நெறியை ஏற்படுத்திக் கொடுத்து, அதையே ஆத்மாவை தூய்மைப்படுத்துகிற ஒரு ஸம்ஸ்காரமாக்கி நமக்கு வேத தர்ம சாஸ்திரங்கள் கொடுத்திருக்கின்றன. சாதாரணமாக ஒரு ஜீவனை, 'காட்டுக்குப் போ;ஸந்நியாஸியாய் இரு' என்று சொன்னால் அவனால் முடியாது. லோக வாழ்க்கையில் அடிபட்டுத்தான் அவனுக்குப் பக்குவம் உண்டாக வேண்டும். பிஞ்சாகக் கசக்கிற காலத்தில் கசந்து, வடுவாக துவர்க்கிற காலத்தில் துவர்த்து, காயாகப் புளிக்கிற காலத்தில் புளித்து, அப்புறம்தான் பழமாகப் பழுத்து மதுர பூர்ணிமாவதற்கு ஸாமானிய ஜீவர்களால் முடியும். தானாக பழுக்காததைத் தடி கொண்டு அடித்துப் பழுக்கப் பண்ண முடியாது!அப்படி இயற்கை வேகத்தை மீறிப் பண்ணினால் ராமலிங்க ஸ்வாமிகள் சொன்னபடி "வெம்பி விழ"வேண்டியதுதான் என்பது ரிஷிகளுக்குத் தெரியும். அதனால்தான் விவாஹத்தையும் கிருஹஸ்த (இல்லற) தர்மங்களையும் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், பூர்வ கர்மாவுக்காக அநேக ஜீவர்கள் பிறந்தாக வேண்டுமே?தாம்பத்தியம் இல்லாமல் இது எப்படி முடியும்? 9841018879 /9841065559/
கிருஹஸ்தாச்ரமத்தில் இவன் முன்பு கற்றுக்கொண்ட வேதத்தைத் தொடர்ந்து ஒதியும் பிறர்களுக்கு ஒதுவித்தும் (கற்றுக் கொடுத்தும்) வரவேண்டும். அநேக யக்ஞங்களையும், ஒளபாஸனையையும் அக்னிமுகமாகப் பண்ண வேண்டும். பிரம்மசர்யத்தில் ஒருத்தனைச் சேர்த்த ஸந்தியா வந்தனமும் கிருஹஸ்தாச்ரமத்தில் தொடர்கிறது. தற்போது மற்ற யக்ஞாநுஷ்டானம், வேதாத்யயனம் இரண்டுமே ரொம்ப ரொம்பக் குறைந்து விட்டாலும் ஸந்தியாவந்தனமும், அதில் முக்யமான காயத்ரீ ஜபமும் துளி இருப்பதால் அதைப்பற்றி அறிய வேண்டும். 9841018879 /9841065559/
காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது"என்பது அர்த்தம். காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே ! கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது, 9841018879 /9841065559/
என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது. இந்த ஒவ்வொரு பாதமும் ஒவ்வொரு வேதத்தின் ஸாரம். அதாவது, ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம். அதர்வத்துக்குத் தனி காயத்ரீ இருக்கிறது. இரண்டாவது உபநயனம் செய்து கொண்டே அதை உபதேசம் பெற வேண்டும். 9841018879 /9841065559/
த்ரிபம் ஏவ து வேதேப்ய: பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி) காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது? சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம். வேதியரின் தேகத் தூய்மை மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும். தேஹோ தேவாலய: இதி . ஸர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம். 9841018879 /9841065559/
அறிவோம் /அனுஷ்டிப்போம் / தகுதிபெறுவோம் // உங்களின் தேவையே எங்களின் சேவை/WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI/CELL NO/9841018879/9841065559/
raghavan.png
raghavan.png

// RAM RAM VADHYAR WEBSITE LINK //

WWW.THISAIKATTI.COM (CLICK HERE) ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //

நல்லது செய்வோம் நல்லது மட்டுமே நடக்கும்

ராம் 🙏ராம்