சுமங்கலிப் பெண்டுகளை உபசரிக்கும் முறை என்ன? சுமங்கலிப் பெண்களை இலையில் உட்கார வைத்து, இரண்டு முறை ஆபோஜனம் போட வேண்டும். பெண்கள் எல்லோரையும் நள்கு சாப்பிட உபசரிக்க வேண்டும். இலையில் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, திராட்சை, ப;லா சுளை போன்ற பழங்களை பரிமாறலாம். பெண்கள் சாப்பிட்ட பின்பு காலில் நலங்கு இட வேண்டும். பிறகு குங்குமத்துடன் கூடிய குங்குமச்சிமிழ், சீப்பு, கண்ணாடி, ரவிக்கைத்துண்டு, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், புஷ்பம் முதலியவற்றை பெண்களுக்கு கொடுக்க வேண்டும் ஆரத்தி யார் எடுக்க வேண்டும்? ஆரத்தியை ஆத்து நாட்டுப் பெண் எடுக்க வேண்டும் அல்லது சுமங்கலிப் பிராத்தனை செய்த குடும்பத்தில் உள்ள வயதில் பெரியோர்களாக உள்ளவர்கள் எடுக்க வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் எப்போது சாப்பிட வேண்டும்? மேற்கூறிய எல்லா உபசாரங்களையும் சுமங்கலிப் பெண்களுக்கு செய்த பிறகு, வீட்டில் உள்ள அனைவரும் சுவாமிக்கு அட்சதைப் போட்டு நமஸ்காரம் செய்து விட்டு சாப்பிட வேண்டும். சுமங்கலி பிராத்தனை நிகழ்ச்சியில் ஆத்து மாட்டுப் பெண்ணும், மாமியாரும் சேர்ந்து ஒரே பந்தியில் சாப்பிடக்கூடாது. சுமங்கலிப் பிராத்தனையில் கலந்து கொண்டு பெண்டுகளாக இருந்தவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வேறு ஏதேனும் நியமனம் உண்டா? பெண்டுகளாக இருந்தவர்கள் மற்றும் ஆத்து பெண்கள் அனைவரும் அன்று இரவு சாப்பிடக்கூடாது. பால், பழம், பக்ஷணம் மட்டில் சாப்பிடலாம். சுமங்கலிப் பெண்கள் சுமங்கலிப் பிராத்தனை செய்த வீட்டிலேயே அன்று இரவு தங்க வேண்டும். மறுநாள்தான் வெளியே செல்ல வேண்டும். அன்னியர்கள் வீட்டிற்கு வரலாமா? சுமங்கலிப் பிராத்தனை நடந்த வீட்டிற்கு அன்று முழுவதும் அந்நியர்கள் யாரும் வரக்கூடாது. அந்த வீட்டினரும் வெளியே செல்லக்கூடாது. மறுநாள் வாசல் கோலம், சுவாமிக்கு போட்ட கோலம் இவற்றை அழித்து புதுக்கோலம் போட்ட பிறகுதான் வரலாம். இது அந்த வீட்டு சம்மந்திகள், மாப்பிள்ளைகள், அந்த வீட்டைச் சேராதவர்களுக்கும் பொருந்தும். சமையல்:- சுமங்கலிப் பிராத்தனைச் சமையலில் வெங்காயம், பூண்டு, பீட்ருட் போன்ற காய்கறிகளைச் சேர்க்கக்கூடாது. சிராத்த சமையலுக்கு என்ன பொருட்களைச் சேர்க்கிறமோ, அதை மட்டும்தான் சேர்க்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு சமையல் குறிப்பு:- 1) பாயசம்.(பயத்தம் பருப்பு+கடலைப் பருப்பு). 2) மாங்காய் இனிப்பு பச்சடி 3) தயிர் பச்சடி (வெள்ளரிக்காய் அல்லது வாழைத்தண்டு). 4) பூசணிக்காய் கூட்டு. 5) அவரைக்காய் கறி. 6) வாழைக்காய் கறி. 7) வாழைத்தண்டு கறி. 8) தனிக்கூட்டு. 9) சாம்பார்.(இதற்கும், கலத்திற்கும் துவரம் பருப்புத்தான் உபயோகிக்க வேண்டும். 10) உளுந்து வடை. 11.மாங்காய் இஞ்சி ஊறுகாய். 12 மாங்காய் ஊறுகாய். 13 உப்பு இல்லாத மோர் அல்லது தயிர்.
உங்களின் தேவையே எங்களின் சேவை/WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI/CELL NO/9841018879/9841065559/

அறிவோம் /அனுஷ்டிப்போம் / தகுதிபெறுவோம்

9841018879 /9841065559/
raghavan.png krkl.png

// RAM RAM VADHYAR WEBSITE LINK //

WWW.THISAIKATTI.COM (CLICK HERE) ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //

நல்லது செய்வோம் நல்லது மட்டுமே நடக்கும்

ராம் 🙏ராம்