×

சுமங்கலி பிரார்த்தனை

சுமங்கலி பிரார்த்தனை

சுமங்கலி பிரார்த்தனை

சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம், சீமந்தம் போன்ற விஷேசங்களுக்கு முன்னர் செய்வது ஆகும். சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நல்ல நாள் மற்றும் கிழமைகள் பார்க்க வேண்டும். கரிநாளாக மட்டும் இருக்கக் கூடாது.

என்ன?சுமங்கலிப் பிராத்தனைதிருமணமாகி (கணவருக்கு முன்பாக) சுமங்கலியாக இறந்து போன பெண்களை உத்தேசித்து அந்தக் குடும்பத்தினரால் (பெண்களால் பெண்களைக் கொண்டு) நடத்தப்படும் நிகழ்ச்சி சுமங்கலிப் பிராத்தனையாகும்.சுமங்கலிப் பிராத்தனை வைதீக காரியமாக இல்லாவிட்டாலும், மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். கிட்டத்தட்ட இதை ஒரு பித்ரு காரியம் என்றே சொல்லலாம். மிகவும் பய பக்தியுடனும், சிரத்தையுடனும் பெண்கள் இதை அனுசரிக்க வேண்டும்.

சுமங்கலிப் பிராத்தனையை எப்போது செய்ய வேண்டும்?

ஒவ்வொரு வருஷமும், தவறாது சிரார்த்தம் செய்வது போல, சுமங்கலிப் பிராத்தனையை ஒவ்வொரு வருஷமும் தவறாது செய்ய வேண்டும். ஆனால், ஒரே வருஷத்தில் இரண்டு சுமங்கலிப் பிராத்தனை செய்யக்கூடாது.

சுமங்கலிப் பிராத்தனைக்கு விதிமுறைகள் உண்டா?

இறந்த சுமங்கலிகளை திருப்திபடுத்தச் செய்யும் இந்நிகழ்ச்சிக்கு சிரார்த்தம் போ…
 சுமங்கலிப் பிராத்தனையில் கலந்து கொள்பவர்களில் யார் யாருக்கு பலன் கிடைக்காது?

சுமங்கலிப் பிராத்தனை செய்பவரின் குடும்பத்துக்கு இரத்த சம்பந்தமில்லாத மற்றவர்கள் உடலுழைப்பு, பண உதவி போன்றவற்றைச் செய்து கலந்து கொண்டாலும் பலன் கிடைகாது. சுமங்கலிப் பிராத்தனையில் கலந்து கொண்டோம் என்ற திருப்திதான் கிடைக்கும்.

சுமங்கலிப் பிராத்தனையை எப்படிச் செய்தால் பலன் கிடைக்கும்?

ஒவ்வொரு குடும்பத்தினரும் தனிதனியாக, அவர்களுடைய் நெருங்கிய உறவினர்களுடன் சுமங்கலிப் பிராத்தனை செய்யும் போது மட்டுமே, சுமங்கலிப் பிராத்தனை செய்தவர் மற்றும் கலந்து கொள்பவர்கள் குடும்பத்தினருக்கு பலன் கிடைக்கும்.

சுமங்கலிப் பிராத்தனை செய்ய எப்போது நாள் பார்க்க வேண்டும்?

விவாஹம், உபநயனம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அங்கமாகவோ அல்லது தியாகவோ சுமங்கலிப் பிராத்தனை செய்யும்போது, தகுந்த நாள் பார்த்து செய்ய வேண்டு…
 புடவையை எவ்வாறு வைக்க வேண்டும்?

புடவையை நன்ராக கொசுவி, மாக்கோலம் போட்ட பலகையினை சுவற்றில் சாத்தி, அதன் மேல் அம்மன் போல் வைக்க வேண்டும். புடவைக்கு மாலை போட்டு, கீழே பாதத்தில் ரவிக்கையை மடித்து வைக்க வேண்டும். புடவை தரையில் படமாலிருக்க கீழே இனனொரு மாக்கோலம் போட்ட பலகையை வைக்க வேண்டும். சுவாமிக்கு வைத்த புடவையை, ஆத்து பெண் சாயங்காலம் கட்டிக் கொள்ள வேண்டும்.

சுமங்கலிகளுக்கு கொடுத்தப் புடவைகளை அவர்கள் என்ன செய்ய வேண்டும்?:-

சுமங்கலிகள், தாங்கள் வாங்கிக் கொண்ட புடவைகளைக் கட்டிக் கொண்டு, பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, பின்பு அவழ்த்து சுவாமிப் பலகையிலேயே வைத்து விட வேண்டும். பிறகு மறுநாள் எடுத்துக் கட்டிக் கொள்ள வேண்டும்.

குத்து விளக்கு எப்போது எப்படி ஏற்ற வேண்டும்?

சாலையில் ஒரு குத்து விளக்கு, ஒரு முகத்துடன் ஏற்ற வேண்டும். மதியம் இரண்டு குத்து விளக்க…
[அபிகாரம் செய்து பரிமாற வேண்டும். சுமங்கலியாக இறந்தவர்களின் பெயர்களைக் கூறி நிவேதனம் செய்ய வேண்டும். சமைத்த பண்டங்கள் சூடாக இருக்க வேண்டும். அதற்காக மீண்டும் சூடு பண்ணக்கூடாது. சுவாமி இலைக்கு பத்தில்லாதவற்றைப் பரிமாற வேண்டும்.

பூஜை செய்யும் முன் பெண்களை அழைத்து, இறந்த சுமங்கலிப் பெண்களின் பெயர்களைச் சொல்லி, தெரிந்த, தெரியாத, அறிந்த, அறியாத எல்லோரையும் நினைத்துக் கொள்ள வேண்டும். எல்லா சுமங்கலிகளும் வந்து சாப்பிடுங்கள் என்று அழைக்க வேண்டும்.

வேறு எந்தவிதமான சாமாங்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்?

ஒரு தாம்பாளத்தில் ஒரு சீப்பு வாழைப்பழம், வெற்றிலை, தேங்காய், பாக்கு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சுக்கு, வெல்லப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.நெய் சேர்க்கக்கூடாது.நீர் மோர், பானகம் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சுமங்கலி பூஜையை எப்படிச் செய்ய வேண்டும்


சுமங்கலி பிரார்த்தனை

2

0 kb

1

Mar 23, 2022

Oct 28, 2025


உங்களின் தேவையே எங்களின் சேவை.

WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI

CELL NUMBER

ராம் ராம்

ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //

நல்லது செய்வோம் நல்லது மட்டுமே நடக்கும்

WhatsApp