பொருந்தியதேசும் பொறையும்திறலும் * புகழும் நல்ல திருந்தியஞானமும் செல்வமும்சேரும் **
செறுகலியால் வருந்தியஞாலத்தை வண்மையினால் வந்தெடுத்தளித்த அருந்தவன் *
எங்களிராமானுசனை யடைபவர்க்கே
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் * மாலிருஞ் சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல்லோர் **அவை தம் மொடும் வந்து இருப்பிடம் மாயன்
இராமானுசன்மனத்து இன்று அவன் வந்து இருப்பிடம் என் தனி தயத்துள்ளேதனக் கின்புறவே
இன்புற்ற சீலத்து இராமானுச !என்றும் எவ்விடத்தும் என்புற்ற நோயுடல்
தோறும் பிறந்து இறந்து * எண்ணரிய துன்புற்று வீயினும் சொல்லுவ தொன்றுண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்றிருக்கும் படி * என்னையாக்கி அங்காட்படுத்தே.
இடுமே இனிய சுவர்க்கத்தில் * இன்னும் நரகிலிட்டுச் சுடுமே ? அவற்றைத் தொடர்தருதொல்லை *
சுழல்பிறப்பில் நடுமே? இனிநம் இராமானுசன் நம்மை நம்வசத்தே விடுமே? சரணமென்றால் *
மனமே ! நையல் மேவுதற்கே
WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI
CELL NUMBER
ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //