பூணூலில் இருக்கும் மூன்று புரிகள்., காயத்ரீ (மனம்)., சரஸ்வதி (வாக்கு)., சாவித்திரி (செய்கை) தேவியரைக் குறிக்கும். இதன் மூலம் பூணூலை அணிபவா் மனம்., வாக்கு மற்றும் செய்கையில் தூய்மையுடன் இருக்க எந்நேரமும் நினைவுறுத்தப்படுகிறாா்.
பூணுல் ஏன் இடது தோளில் அணிகிறோம்.? பூணுல் ஏன் மூன்று பிரியாக இருக்கிறது..?
இடது தோளில் பூணுல் அணிய வேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. எப்போதும் பூணுல் இடது தோளில் இருக்க வேண்டும். இடது தோளில் பூணுல் இருக்கும்போது அதற்கு உபவீதி என்று சிறப்புப் பெயர்.
உபவீதியாக எப்பொதும் இருக்க வேண்டும் என்று தா்ம சாஸ்திரம் (ஸதோப வீதினா பாவ்யம்) சொல்கிறது. தேவா்களுக்கு பணிவிடை செய்யும் வேளையில் பூணுல் இடது தோளில் இருக்க வேண்டும். அதாவது உபவீதியாக இருக்க வேண்டும.
நம் முன்னோர்களை ஆராதிக்கும் போது பூணுல் வலது தோளில் இருக்க வேண்டும். ரிஷிகளை வழிபடும் வேளையில் இரு தோளிலுமாக தொங்க வேண்டும். அதாவது மாலை போல அணிய வேண்டும். முத்தொழிலின் வெளிப்பாடு முப்பிரி.
மூன்று ஆச்ரமங்களுக்கும் அது தேவை.
காலம் மூன்று. மூர்த்திகள் மூன்று.
பூணுலின் பிரிவுகளும் மூன்று.
மூன்று எண்ணிக்கை முற்று பெற்றதாக கூறப்படுகிறது.
ஏலத்தில் மூன்று முறை
அழைப்பாா்கள். நீதி மன்றத்திலும் மூன்று முறை அழைப்பாா்கள்.
அது முற்று பெற்றதாக கருதுகிறோம்.
பூணுல் பரமாத்மா வடிவம் (யஞ்ஜாக்ய பரமாத்மாய). பரமாத்மா
மூன்று கால்களோடு எழும்பினார் (த்ரீபாத் ஊர்தவ) மூன்று அடி அளந்தவா்.
அப்போது முற்றுப் பெற்றது. தேவா்கள்., ரிஷிகள்., முன்னோர்கள்
இம்மூவருக்கும் தினமும் பணிவிடை செய்ய வேண்டும். அதாவது
நமக்கெல்லாம் நித்யப்படி (தினமும்) 3 விதமான கடன்கள் (வேலைகள்) உள்ளன்.உப-சமீபத்தில், நயனம் - அழைத்துக் கொண்டு போகிறது. யாருக்கு ஸமீபத்தில் அழைத்துக் கொண்டு போகிறது?ஒருவனை குருவுக்கு ஸமீபத்தில் அழைத்துக் கொண்டு போகிறதுதான் உபநயனம். குரு யார்? வேதவித்துக்கள். முதல் ஆசிரமமான பிரம்மச்சரியத்துக்கு ஒரு குரு;கடைசி ஆசிரமமான ஸந்நியாசத்துக்கு ஒரு குரு. வேத வேதாங்கம் அறிந்தவர்கள் முதல் ஆசிரமத்துக்கு குரு. வேதம் உள்பட எல்லாவற்றையும் விட்டு பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் கடைசி ஆசிரமத்துக்கு குரு. வித்தையைத் தெரிந்து கொள்வது முதல் ஆசிரமம். ஞானத்தைத் தெரிந்து கொள்வது கடைசி ஆசிரமம். எட்டு வயசுக் குழந்தைகள் அர்த்தம் தெரிந்து பூணூல் போட்டுக் கொண்டு ஜபம் பண்ணிவிட்டால் லோகமெல்லாம் நன்றாக ஆகிவிடும்.த்விஜன் அர்த்தம் </div>
வேதத்தை ஸ்வீகரிப்பதற்கு ஒருத்தனை அர்ஹனாக்கி (அருகதை உள்ளவனாக்கி)
அதன் மூலம் லோகம் முழுவதற்கும் நல்ல திவ்ய சக்திகளைப் பரப்புகிற
பரம ச்ரேஷ்டமான கர்மாவான உபநயனத்தின் பெருமையை அறிந்து
அதை உரிய காலத்தில் பண்ண வேண்டும்.
த்வி-ஜன்-இருபிறப்பாளன்-எனப்படும் பிராம்மண, க்ஷத்ரிய,
வைச்யர்கள் லோகோபகாரமான இரண்டாவது பிறப்பை அடைவது
அவர்கள் எப்போது வேதத்தைக் கற்கத் தகுதி பெறுகிறார்களோ
அப்போதுதான். இந்தத் தகுதியை அவர்கள் பெறுவது உபநயன ஸம்ஸ்காரத்தில்தான்.
இதைக் காலத்தில் செய்ய வேண்டியது பெற்றோர் கடமை.
உப-சமீபத்தில், நயனம் - அழைத்துக் கொண்டு போகிறது. யாருக்கு ஸமீபத்தில் அழைத்துக் கொண்டு போகிறது?ஒருவனை குருவுக்கு ஸமீபத்தில் அழைத்துக் கொண்டு போகிறதுதான் உபநயனம். குரு யார்? வேதவித்துக்கள். முதல் ஆசிரமமான பிரம்மச்சரியத்துக்கு ஒரு குரு;கடைசி ஆசிரமமான ஸந்நியாசத்துக்கு ஒரு குரு. வேத வேதாங்கம் அறிந்தவர்கள் முதல் ஆசிரமத்துக்கு குரு. வேதம் உள்பட எல்லாவற்றையும் விட்டு பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் கடைசி ஆசிரமத்துக்கு குரு. வித்தையைத் தெரிந்து கொள்வது முதல் ஆசிரமம். ஞானத்தைத் தெரிந்து கொள்வது கடைசி ஆசிரமம். எட்டு வயசுக் குழந்தைகள் அர்த்தம் தெரிந்து பூணூல் போட்டுக் கொண்டு ஜபம் பண்ணிவிட்டால் லோகமெல்லாம் நன்றாக ஆகிவிடும்.
WWW.THISAIKATTI.COM/MOBILE APP/THISAIKATTI
CELL NUMBER
ஜெய்ஸ்ரீராம் // ராம்ராம்// ஜெய்ஸ்ரீராம்// ராம் ராம் //