ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

(திருக்கண்ணபுரம் பிரதர்ஸ் ராம் ராம் வாத்யார்)

அடியோன்களுடைய பூர்வீகம் திருக்கண்ணபுரம். நாங்கள் 1984 ம் ஆண்டு முதல் 1991 முடிய ஸ்ரீராஜா வேத காவ்ய பாடசாலை யில் டி எஸ் பாலசுப்ரமண்ய கனபாடிகளிடம் க்ரமாந்தம் வேதாத்யனம் செய்தோம். 1993 முதல் சென்னையில் உபாத்யாயம் பூர்வம் அபரம் வேதபாராயணம் மற்றும் திவ்யப்பந்தம் ஸ்ரீசுதர்ஸணாதி ஹோமங்கள் அனைத்தும் சிறப்பாக நடத்தி வருகிறோம்.

திசைகாட்டி இணையதளம் மூலம் அனைவரும் நமது ஸனாதன தர்மத்தின் அடிப்படையான சந்தியாவந்தனாதி அனுஷ்டானம் மற்றும் நித்ய திருவாராதனம் தர்ப்பனாதிகளை விடாமல் செய்து வருவதற்கான வழிகளையும் திசைகாட்டி . காம் மூலம் அவரவர் அனுஷ்டான க்ரமப்படி செய்து தருகிறோம்.

மேலும் வைதீக சுப காரியங்களுக்கான லிஸ்ட் மற்றும் மாடல் பத்திரிகை அவ்வப்போது விசேஷதினங்களில் வரும் பூஜா செய்யும் முறையையும் ஆடியோ மூலம் இதில் பெற்றுக்கொள்ளலாம். ராம் ! ராம் !!

உங்களின் தேவையே எங்களின் சேவை!