ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருக்கண்ணபுரம் ப்ரதர்ஸ்

எங்களைப்பற்றி சில வரிகள்…

பூர்வீகம்:

அடியேன் ராமானுஜ தாஸன் எங்களது பூர்வீகம் என்று சொன்னால் திருக்கோஷ்டியூர். அதாவது எங்களுடைய பிதாமஹர் (தாத்தா) திருவேங்கடாச்சாரி (உபயவேதம்) நாலாயிர திவ்ய ப்ரபந்தம் வேதம் மற்றும் ப்ரயோகம் மூன்றிலும் தேர்ச்சி பெற்றவர் (திருக்கோஷ்டியூர் பாடசாலை வாத்யார்) எங்களது தகப்பனார் அப்பாவிடமே நாலாயிர திவ்யப்ரபந்தம் காவியங்கள் பாடசாலையில் பயின்றார். எங்களது அம்மாவின் பூர்வீகம் திருக்கண்ணங்குடி எங்களது அம்மாவின் அப்பா ஆழ்வார் திருநகரி (ஸ்ரீனிவாஸஅய்யங்கார்) எங்களுடைய மாதாமஹர் (அம்மாவின் வழி தாத்தா) திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிப்பெருமாளிடம் 30 ஆண்டுகள் திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்து வந்தார். எங்களது அப்பா கல்யாணம் ஆன பிறகு தாத்தாவின் கைங்கர்யமான சௌரிபெருமாள் திருமடப்பள்ளை கைங்கர்யத்தை 20 வருடம் கைங்கர்யம் செய்து வந்தார். எங்களது பூர்வீகம் என்று சொல்லும் படி திருக்கண்ணபுரம் அமைந்தது.

வைதீகம்:

நாங்கள் 1984 ம் ஆண்டு கும்பகோணம் ராஜா வேத காவ்ய பாடசாலையில் ப்ரும்மஸ்ரீ டி எஸ் பாலசுப்ரமண்ய கனபாடிகளிடம் 1991 வரை வேத அத்யயனம் செய்து பிறகு 1991 முதல் 1993 வரை பதம் க்ரமம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ சத்குரு சபா வேதபாடசாலையில் க்ரமாந்தம் பூர்த்தி செய்து 1995 ல் சென்னையில் உபாத்யாயம் செய்ய ஆரம்பித்தோம். வேதபாராயணம் நாலாயிர திவ்யப்ரபந்தம் யஜுர் வேத பூர்வாபரம் மற்றும் ஸுதர்ஸனாதி ஹோமம் மிகவும் சிறப்பா செய்து வருகிறோம்.

 

சேவை:

மேற்படி லோக க்ஷேமம் மற்றும் குழந்தை மற்றும் மாணவ மாணவிகளின் கல்வி முன்னேற்றத்தை முன்னிட்டு 2006 முதல் ஸ்ரீஹயக்ரீவ ட்ரஸ்ட் ஒன்று ஏற்படுத்தி அதன் மூலம் தாராளமான மனம் படைத்த அன்பர்களின் ஒத்துழைப்புடன் ப்ரதி வருடம் ஜனவரி 10 தேதிக்குள் 7 நாட்கள் ஸ்ரீ ஹயக்ரீவ ஸஹித பூவராஹ ஜபஹோமம் சிறப்பாக வெகு விமர்சையாக நடத்தி வருகிறோம்.

 

வாஸ்து:

மேற்படி சுபகிரஹம் அமைப்பதின் அடிப்படையான (ஆண்டாள் வாஸ்து) டேட்டா பேஸ் முறைப்படி வாஸ்து ஆலோசகர்களாக தேர்ச்சி பெற்று ஆர்வம் உள்ளவர்களுக்கு பார்த்து செய்து தருகிறோம். மேலும் இதே மாதிரியான நிறை சேவையில் ஈடுபட்டு அனைவருக்கும் ப்ரயோஜனம் இருக்கும் படி எங்களை செதுக்கிக்கொண்டு இருக்கிறோம்.

சுபமஸ்து ராம் ராம்

[/vc_column_text][/vc_column][/vc_row]